உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

தாஜ்மகாலுக்கு ஓட்டு போடாதீர்கள்

புதிய உலக அதிசயங்கள் வரிசையில் தாஜ்மகாலும் இடம் பிடிக்க இந்த நம்பருக்கு SMS செய்து தாஜ்மகாலுக்கு ஓட்டளியுங்கள் என உங்களுக்கு உங்கள் நண்பர் SMS அனுப்புகிறாரா? நீங்களும் அதை நம்பி SMS ஓட்டு போட்டீர்களா?...

போடாதீர்கள்.. இதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை...

“உலகத்தின் புதிய ஏழு அதிசயங்கள் தீர்மாணிக்கப்படுகிறது.. அதற்கான ஓட்டெடுப்பு” என்று நடத்தப்படும் இந்த ஓட்டெடுப்பின் பின்னனி என்ன என்று பார்த்தோமானால் அதிர்ச்சியாக இருக்கிறது...

சுவிட்சர்லாந்தில் உள்ள NOWC (New Open World Cooperation) என்னும் தனியார் நிறுவனத்தின் தலைவர் Bernard Webber என்பவரால் முடுக்கி விடப்பட்டுள்ள இந்த வாக்கெடுப்பு உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது...

இலவச மற்றும் கட்டண ஓட்டுக்கள் உதவியுடன் நடத்த படும் இந்த வாக்கெடுப்பு செல்பேசி SMS, தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தின் மூலம் நடத்தப்படுகிறது.

இதை பற்றி மேலும் தகவல்கள்

1) இது முழுக்க முழுக்க தனியார் நடத்தும் வாக்கெடுப்பு... இதற்கும் எந்த நாட்டின் அரசுகளுக்கும் தொடர்பில்லை...

2) உலக பாரம்பரியங்களை அறிவிக்கும், சேர்க்கும், நீக்கும் அதிகாரம் உடையது ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) மட்டுமே... UNESCO இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது...


UNESCO இதன் வாக்கெடுப்பு நடத்தப்படும் முறைகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து அவநம்பிக்கையும், கவலையும் தெரிவித்துள்ளது...

3) இந்த வாக்கெடுப்புக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நமது மத்திய அரசும் மறுத்துள்ளது...

4) இது முழுக்க முழுக்க லாப நோக்கோடு தனியார் நடத்தும் கருத்து கணிப்பு என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்று உலகெங்கிலும் எதிர்ப்பு குரல் கிளம்ப ஆரம்பித்துள்ளது... எகிப்து நாட்டில் ஏற்கனவே இதற்கு எதிராக, “ஓட்டளிக்காதீர்கள்” என்று பிரச்சாரம் கிளம்பி இருக்கிறது...

5) ஒவ்வொருவர் போடும் ஒரு SMS வோட்டுக்கும் மொபைல் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பகுதி இந்த தனியார் நிறுவனத்தை சென்றடையும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்... நமது அரசாங்கத்தின் BSNL கூட இதற்கு விதிவிலக்கல்ல

6) இன்னும் T சர்ட்டுகள் மற்றும் மெலும் பல வியாபார பொருட்கள், உலக சுற்றுலா மற்றும் பல வியாபாரங்கள் இதன் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளன... அதன் லாபங்களும் சர்வதேச நிறுவனங்களிடையே பங்கிடப்படுகின்றன...

அப்பாவி மக்களின் நாட்டுப்பற்றை கூட காசாக்கும் எண்ணம் கொண்ட இத்தகைய நிறுவனங்களை என்ன செய்வது...


http://www.zeenews.com/print_articles.asp?aid=377013&sid=NEW
http://www.timesnow.tv/Sections/Sports/Whos_poll_is_it/articleshow/2161700.cms

9 மறுமொழிகள்:

வவ்வால் சொன்னது…

மாயன்,

சென்றமுறை வாக்கெடுப்பு எடுத்த்வுடனே இது ஒரு டுபாகூர் வாக்கெடுப்பு என்பதை பத்திரிக்கைகள் அம்பலப்படுத்திவிட்டன. தற்போது அனைவரும் இந்த வாக்கெடுப்பை கண்டுகொள்வதில்லை. அதனால் தான் இம்முறை தினமலர் முன்னர் போல் விளம்பரப்படுத்தவில்லை.

உங்கள் பதிவும் மேலும் இத்தகவலை பரப்பும் என்று நம்புவோம்!

மாயன் சொன்னது…

எனக்கு இன்னும் SMS வந்த வண்ணம் இருக்கிறது... இதில் என்ன வேதனை என்றால் நன்றாக படித்த, புத்திசாலிகள் என்று நான் நினைத்த நண்பர்கள் எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு "தேசப்பற்றை" காண்பிக்கிறார்கள்.. வலைத்தளத்தில் நுழைந்து ஐ.பி-யை மாற்றி மாற்றி கள்ள வோட்டு வேறு (தொட்டில் பழக்கம்?)...

வருகைக்கு நன்றி...

லொடுக்கு சொன்னது…

சில ஆண்டுகளுக்கு முன் இது தொடங்கப்பட்ட போதே எனக்கு இதன் மீது ஒரு ஐயம் இருந்தது. அது தெளிவாக்கப்பட்டு மீண்டும் நீங்கள் உறுதிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.

காசு எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் பாருங்கள். இப்போது இந்திய மக்களின் உணர்ச்சிவசப்படும் நாட்டுப்பற்றை முதலாக்குகிறார்கள். :(

சும்மா அதிருதுல சொன்னது…

வவ்வால் said...
மாயன்,
.......அதனால் தான் இம்முறை தினமலர் முன்னர் போல் விளம்பரப்படுத்தவில்லை.
///

இதே மருத மினாட்சி அம்மன் போட்டிக்கு வந்துருந்தா....????

என்ன வவ்வால் .. :)

மாயன் சொன்னது…

//இதே மருத மினாட்சி அம்மன் போட்டிக்கு வந்துருந்தா....????//

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் போட்டியில் இருந்தது என்றே நினைக்கிறேன்..

மாயன் சொன்னது…

//காசு எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் பாருங்கள். இப்போது இந்திய மக்களின் உணர்ச்சிவசப்படும் நாட்டுப்பற்றை முதலாக்குகிறார்கள். :( //

இதற்கு மறைமுகமாக அரசும் துணை போவதும் தான் வேதனை... தெரிந்தே தெரியாமலோ இணையத்தளங்கள் பல இதற்கு விளம்பரம் அளித்துக் கொண்டிருக்கின்றன...

சும்மா அதிருதுல சொன்னது…

மாயன் said...
//இதே மருத மினாட்சி அம்மன் போட்டிக்கு வந்துருந்தா....????//

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் போட்டியில் இருந்தது என்றே நினைக்கிறேன்..
//

முதல் ரவுண்டில் இருந்தது தான் அதற்காகதான் கூவி கூவி விளம்பரம் செய்தது

அடுத்த ரவுண்டில் இல்லையென்றதும் பீஸ் போன பல்பாயிடுச்சி தினமலர்... !!!

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

டிசம்பர் 2004ல் பினாத்தலார் இதை எழுதினார் :http://penathal.blogspot.com/2004/12/blog-post_21.html

:-)

டுபாக்கூர் தொடர்கிறது!

மாயன் சொன்னது…

//டுபாக்கூர் தொடர்கிறது! //

மக்கள் எதையும் உடனே நம்ப தொடங்கி விடுவதே இதற்கு காரணம்... இந்த இடுகையையின் நம்பகத்தன்மையை கூட எத்தனை பேர் இணையத்தில் சென்று உறுதி செய்ய முனைந்திருப்பார்கள்? அது தான் மக்களின் பலவீனம்... பதில் தெரியவில்லை என்றால் மட்டுமில்லை.. சரியாக தெரியவில்லை என்றால் கூட கேள்வி கேட்கும் பழக்கம் வர வேண்டும்...

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..