உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

அறிவு ஜீவிகளும் ஹைடெக் விஷயங்களும்

அறிவுஜீவிகள்னா பேசும் போது எங்கேயோ பாக்கணும், பேசும் போது ஏதோ யோசிக்கற மாதிரி தெரியணும், நாலு வார்த்தைக்கு ஒரு தடவை நல்லா கேப் விடணும்....

அறிவு ஜீவிகள்னு அறியப்படுற சில பேரு எங்கயாச்சும் TV, மேடையில பேசி கேட்ருக்கீங்களா?

உங்களுக்கு என்னங்க தோணும் கேக்கும் போது?

நம்ம பி.சி. ஸ்ரீராம், எங்க தல கமல், தங்கர் சார் (எனக்கு தெரிஞ்ச அறிவுஜீவிங்க சிலர்) இன்னும் பல பேர் இருக்காங்க... எழுத்துலகில, சினிமாவில, இலக்கியத்துல...

ஏதேதோ பேசுவாங்க... உலகத்துல எங்கெங்க இருந்தோ யார் யார் பேரையெல்லாமோ சொல்வாங்க... அவர படிச்சிருக்கேன்.. இவர படிச்சிருக்கேன்... (பாதி பேரு முழுசா நம்ம வாய்ல நுழைஞ்சா பெரிய விஷயம்ங்க) அந்த படம் இப்படி இருக்கும், இந்த இலக்கியம் இத சொல்லுது... அடாடாடாடா... நாம எல்லாம் இந்த பூமியில் தேவை இல்லாம பிறந்துட்டமோனு ஒரு நிமிஷம் அழ வெச்சுருவாங்க...

ஏன் இப்படி இதை இப்படி எடுத்தீங்க, இல்லை எழுதினீஙன்னு சும்மா சாதரணமா கேட்டா கூட சொல்ற பதில் எல்லாம் சும்மா ஜயன்ட் வீல்ல போட்டு சுத்தி சுத்தி அடிச்சமாதிரி இருக்கும்... ஒண்ணுமே புரியாது..

நாம் பரவாயில்லை... பேட்டி எடுக்கிறவர் நிலைமை இருக்கே... சும்மா அப்படியும் இப்படியும் நெளிவாரு பாருங்க... அதுவும் தமிழ தப்பு தப்பா பேசுற ஹைடெக் அம்மணிங்கள சும்மா சுத்த தமிழ்ல கண்டபடி பேசி கலங்கச்சிடுவாங்க நம்ம அறிவுஜீவிங்க...

இப்படி எல்லாம் பேசுறதால யாருக்குங்க பிரயோசனம்?.. இல்லை கேட்டது தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க... வெகு ஜனங்களுக்கு புரியற மாதிரி இல்லாத எந்த கலையும், ஊடகமும் விளங்கவே விளங்காதுங்கிறது என்னோட தாழ்மையான அபிப்பிராயம்...

அதுக்காக வெகு ஜனங்களுக்கு ரசனை கம்மின்னு நான் சொல்ல வரலைங்க... புரியற மாதிரி பேசினா நாமளும் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிக்கலாமேன்னு ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேங்க....

9 மறுமொழிகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

என் எண்ணத்துக்கும் சேர்த்து எழுத்துருக் கொடுத்துள்ளீர்கள்.
நன்கு துன்பப்பட்டுள்ளீர்கள்.

மாயன் சொன்னது…

வாங்க யோகன்... நம்மளை மாதிரி நிறைய பேரு இருக்காங்க... என்ன வெளிய சொல்றதில்லை அவ்ளோ தான்...

mike சொன்னது…

நல்லா சொன்னீங்க

சதுர்வேதி சொன்னது…

அருமையான பதிவு. உங்களை எட்டு போட அழைத்து இருக்கிறேன்!

சிறப்பாக செய்யுங்கள்.

வவ்வால் சொன்னது…

மாயன் உங்களைப் போன்ற அறிவு ஜீவிகளுக்கே புரியவில்லையா? அப்போ நானெல்லாம் என்னவாகிறது!

இந்த எட்டு , 16 எல்லாம் போட சொல்லியுளீர்கள் என் மீது என்ன கோபம், இப்படி எல்லாம் அழைப்பு வந்தால் நாலு கால் பாய்ச்சளில் ஓடி ஒளிவது தான் எனது வழக்கம்!

மாயன் சொன்னது…

வாங்க...

எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க இப்படி?...

எனக்கு தலையை சுத்தி ஒளிவட்டம் எல்லாம் இல்லைங்க...

எட்டு போட சொன்னா இங்க வந்து எனக்கு ஒட்டு போட்டுகிட்டு இருக்கீங்க...?

போங்க.. போய் எட்டு போடுங்க...

கண்மணி சொன்னது…

நடிகர் பார்த்திபனை லிஸ்ட்டில் சேர்த்துக்கங்க.
புரியாம பேசினா அறிவு ஜீவி
புரியாம எழுதின்னா கவிதை

மாயன் சொன்னது…

//நடிகர் பார்த்திபனை லிஸ்ட்டில் சேர்த்துக்கங்க.//

வாங்க மேடம்.. அந்த லிஸ்ட் வர வர பெருசாயிட்டே போகுதுங்க... அதான் பதிவுக்கே காரணம்...

இளமுருகன் சொன்னது…

இதான்... இதையேதான்...நான் என் ப்ளாக்ல கேட்டிருந்தேன்...நன்றி

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..