உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

செவ்வாய், ஜூன் 19, 2007

மழை- ஒரு அற்புதமான அனுபவம் -சென்னைக்கு மட்டும் பூச்சாண்டி

மழை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் சென்னை மாதிரி ஒரு நகரத்தில் இருந்து கொண்டு மழை பிடிக்கும் என்று சொல்வதற்கு ஒரு தில் வேணும்யா...

காரணமா?

சேற்று குழம்பாகிவிடும் சாலைகள்...

தெப்பக் குளமாகிவிடும் வீதிகள்...

கொசு உற்பத்திச்சாலைகளாகும் சாக்கடைகள் (மலேரியா உள்பட பல பயங்கர ஜூரங்களை உருவாக்கும் கொசுக்கள் நன்னீரில் உற்பத்தி ஆகுமென்பதை அறிக)...


பயங்கர ஜூரங்கள் (டெங்கு, மலேரியா வந்து குளிர்ல ரெண்டு தடவை பிரேக் டான்ஸ் ஆடினா நான் சொல்ற பயங்கர ஜூரத்துக்கு அர்த்தம் புரியும்),

டூ வீலர் ஸ்கிட்டுகள் (விழுந்து எழுந்து சப்பாணி கமல் மாதிரி போகிற சுகமே சுகம்னு சொல்றீங்களா?.. நமக்கு விருது எல்லாம் கிடையாதுங்க.. பஞ்சரும், டிஞ்சரும் தான்),

பன்னீர் தெளிப்பது போல சேறு தெளிக்கும் பஸ்கள்,

வேரோடு சாய்ந்து ரோடு மறியல் செய்யும் மரங்கள்..

செருப்பை போட்டுக்கொண்டு மேலே சேறடிக்காமல் நடக்க ரொம்ப பயிற்சி வேணுமப்பு... (ரோட்டில் செல்லும் டூ வீலர், ஆட்டோ வேகமாய் சென்று அடிக்கும் சேறு இந்த கணக்கில் வராது)

இடுப்பளவு தண்ணீரில் பள்ளிச்செல்லும் குழந்தையை (புத்தக மூட்டையோடு) தலைக்கு மேல் அனாயசாமாக தூக்கி கொண்டு நடக்க திராணி வேண்டும்....


வீட்டுக்குள் தண்ணீர் புகும் பட்சத்தில் கட்டில் மேல் உட்கார்ந்த படி குடும்பம் நடத்த தெரிய வேண்டும்...

சென்ற வருடம் சென்னை முழுக்க மழை பண்ணாத அட்டகாசம் இல்லை...

மழையை சமாளிக்க மக்கள் குறளி வித்தைகள் காட்ட வேண்டியிருந்தது... பல இடங்களில் எதுவுமே எடுபடாமல் மழை காட்டிய வித்தைகளை மக்கள் பார்க்க வேண்டியதாயிற்று...

இந்த வருட மழையை சமாளிக்க அரசாங்கம் ஏதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த மாதிரியும் தெரியவில்லை... (மழைநீர் கால்வாய்கள் அடைப்பு நீக்குதல், ரோடுகளின் குண்டு குழிகளை சரி செய்தல், மழை நீர் தேங்காமல் தடுக்க அமைக்கப்பட்ட வழிகளில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றுதல்.. ம்ஹூம்)

என்ன செய்ய எல்லோரும் தயாராகிக் கொள்ள வேண்டியது தான்.. காரில் போகும் அரசாங்க, அரசியல் சீமான்களுக்கு கால்நடைகளின் கூச்சல் கேட்கப் போகிறதா என்ன? ஹூம் பார்க்கலாம்...

(கால்நடை - நாம தாங்க.. கால்நடையா போறோம்ல)

5 கருத்துகள்:

  1. //என்ன செய்ய எல்லோரும் தயாராகிக் கொள்ள வேண்டியது தான்.. காரில் போகும் அரசாங்க, அரசியல் சீமான்களுக்கு கால்நடைகளின் கூச்சல் கேட்கப் போகிறதா என்ன? ஹூம் பார்க்கலாம்...

    (கால்நடை - நாம தாங்க.. கால்நடையா போறோம்ல)//

    என்ன பண்றது. இது எல்லார் ஆட்சியிலயும் பாரபட்சம் இல்லாமல் நடப்பதுதான். நான் இப்ப்பயே தயாராகிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதாங்க.. நல்ல மழைக்கோட்டு தேடிகிட்டிருக்கேன்.. ம்ஹூம்.. முன்னமே வாங்கி வச்சிருக்கலாம்.. என்னத்தச் சொல்ல..

    பதிலளிநீக்கு
  3. குறளோவியம் எழுதிய அரசியல் வித்தகர்( வித்தைக்காட்டுவாரா?) ஆட்சியில் மக்கள் குறளி வித்தை தெரியாமல் இருக்கலாமா மாயன்,

    சாலைகள் எல்லாம் பள்ளமாக இருக்க காரணம் மழை நீர் சேகரிப்பிற்காக தான் என்பது கூட அறியாத அப்பாவியா நீங்கள்!

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், ஏரோட்டம் நின்னு போனால் காரோட்டம் என்னவாகும் எனவே ஏர் ஓட்டுவதை மக்கள் மறந்து விடாமல் இருக்கவே சாலைகளில் சேற்றை அரசு நிரப்பி வைத்துள்ளது என்பதை அறியாத அறிவீலியாக இருக்கிறீர்களே.

    //டூ வீலர் ஸ்கிட்டுகள் (விழுந்து எழுந்து சப்பாணி கமல் மாதிரி போகிற சுகமே சுகம்னு சொல்றீங்களா?.. நமக்கு விருது எல்லாம் கிடையாதுங்க.. பஞ்சரும், டிஞ்சரும் தான்),//

    அரசு மருத்துவமனைகளில் சிறப்பான எலும்பு முறிவு சிகிச்சை அளிப்பது எதற்காகவாம்,ஆசியாவிலேயே பெரிய அரசு மருத்துவமனை நமது அரசு பொது மருத்துவமனை என்பதை மறவாதே கண்மனியே!

    //ோடுகளின் குண்டு குழிகளை சரி செய்தல், மழை நீர் தேங்காமல் தடுக்க அமைக்கப்பட்ட வழிகளில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றுதல//

    சாலைகளில் புதிய பள்ளம் தோண்டவென்றே மின் துறை,குடி நீர், தொலைப்பேசி துறைகள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளதை அறியாமல் குழிகளை மூட சொல்லும் சிறுமதி படைத்தவராக உள்ளீரே! அப்படியே பள்ளம் இல்லாத சாலைகள் ஏதேனும் இருந்தால் விரைந்து பள்ளம் தோண்ட 24 மணி நேர குழிப் பறிக்கும் சேவை உள்ளது! நமது நாட்டில் தான் என்பதையும் உமது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்!

    என்ன கதை சாமி இது, நீர் வழிகள் ,கழிவு நீர்க்கால்வாய்களை ஆக்கிரமிப்பதே தொண்டர்கள் தான் அவர்களுக்கு அதற்கு கூட உரிமை இல்லையா கழக ஆட்சியிலே?

    நீரே கால்நடைகள் என்று ஒப்புக்கொண்ட பிறகு இப்படி சொகுசு வாழ்கைக்கு ஆசைப்படலாமா , இலவச வண்ணத்தொலைக்காட்சியும் இரண்டு ரூபாய்க்கு அரிசியும் போதுமே கழுதைக்கு எதுக்கு நல்ல சாலை!

    //நல்ல மழைக்கோட்டு தேடிகிட்டிருக்கேன்..//

    பொன்ஸ், மழைக்கு கோட் போடவா? மனிதனுக்கா?

    பதிலளிநீக்கு
  4. வவ்வாலாரே...நான் ஏதோ என் ஆதங்கத்தை சொல்ல நினைச்சா... இப்படி என்னை உடன் பிறப்புகள் கிட்ட மாட்டி விடறீங்களே?

    உங்க நக்கல் பின்னூட்டத்தையே தனி இடுகையா போடலாம் போல இருக்கே?.. பின்னிட்டீங்க போங்க...

    பதிலளிநீக்கு
  5. மழை விட்டு விட்டு வந்து நாம தயாராயிட்டமா இல்லையான்னு சோதனை பண்ணிட்டிருக்கு கவனிங்க...

    பதிலளிநீக்கு