உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூன் 07, 2007

உலகத்துக்கு பால் ஊத்திடாதீங்க...


க்ளோபல் வார்மிங்க் (Global Warming)... ஹவுஸ் வார்மிங்க் மாதிரி ஏதோ உலகம் பால் காய்ச்சுதுன்னு தான் நானும் நெனச்சிட்டு இருந்தேங்க....

விட்டா உலகத்த மறந்துட்டு வேற கிரகத்துல நாம எல்லாம் பால் காய்ச்சி குடியேறுகிற மாதிரி ஆயிடுமாம்... அத தான் குளோபல் வார்மிங்க்னு சொல்றாங்க....


சைனாவில இருந்து ஒருத்தன் சொல்றான்... இப்படியே போனா இன்னும் 30 வருசத்துல உலக வரைபடத்துல இருந்து சென்னை, மும்பை, லண்டன், நியூயார்க் நகரம் எல்லாம் காணாம போய்டுமாம்….

அமெரிக்கால இருந்து இன்னொருத்தன் சொல்றான் பனிமலை எல்லாம் உருகுதாம்... 2080-ல உலகத்தோட கடல் மட்டம் 23 அடி ஜாஸ்தி ஆயிடுமாம்... அதனால எல்லார்க்கும் ஆப்பாம்... அட ஆப்பம் இல்லைங்க… ஆப்பு-ஆம்...

ஆக கூடி எல்லாம் நம்ம சிசர் மனோகர் மாதிரி ஒரே மேட்டர தான் சொல்றானுங்க...

“சிரிங்கடா... சிரிங்க...இன்னும் மூணே வருஷம் தான்...
பூமாதேவி சிரிக்க போறா.....
எல்லாரும் உள்ள போப்போறீங்க..." (படம்-துள்ளி திரிந்த காலம்)

(பூமியை குளிர வைக்க என்ன பண்ணலாம்...

சூரியனை பூன்னு ஊதி அணைச்சிடுவோமா?

பெரிய ஏ.சி, மெஷின் செஞ்சு பூமிக்கு மேல மாட்டிடுவோமா?

இல்லை, பூமி மேல அப்பப்ப பெரிய பைப்ல தண்ணி அடிச்சி விட்ருவோம?

அது கூட நல்ல ஐடியா தான்... தரையில பெரிய குழியா தோண்டி பீரை மில்லியன் கேலன் கணக்கில ஊத்தினம்னா பூமி குளிர்ந்திடாது?)


குளோபல் வார்மிங்க்னா என்னங்க?

"புவி வெப்பநிலை அதிகரிப்பு (Global warming) என்பது காலப்போக்கில் புவியின் காற்று மண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும்."
(நன்றி:விக்கிபீடியா)

இதுக்கு காரணம்... மனிதர்களாகிய நாம தாங்கோ.. நாம தாங்கோ... அப்படின்னு சென்ட்ரலைஸ்ட் ஏ.சி போட்ட ஹால்ல இருந்து பெரிய பெரிய கண்ணாடி போட்டு, குறுந்தாடி வெச்ச விஞ்ஞானிங்க எல்லாம் சொல்லிட்டாங்க...

அட அது ஒண்ணும் இல்லீங்க...

பூமியோட சராசரி வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸ் இருந்துதாம்.. இப்போ 2 டிகிரி வரை வந்துடுச்சாம்..

அதுக்கு காரணம்... நாம எல்லாம் வீட்டுல ஃபிரிட்ஜ் பயன்படுத்தறதும், ஏ.சி போட்டு தூங்கறதும் தானாம்...

இந்த பொருள்ல எல்லாம் ஏதோ பச்சை வீட்டு வாயு இருக்காம்...அது வெளிய வருதாம்(கரிமல வாயு, மீத்தேன், நைட்ரோஜன் ஆக்சைட்).
(பேசாம அந்த வீட்டுக்கு சிவப்பு பெயிண்ட் அடிச்சிட்டா என்ன?)

அது காரணமா காற்று, சுற்று சூழ்நிலை வெப்பம் ஜாஸ்தி ஆகி... அண்டார்டிகா, க்ரீன்லாந்து இங்கே இருக்கிற பனி மலை எல்லாம் உருகுதாம்... அதனால தான் ஆபத்தாம்..

அதுமட்டும் இல்லாம... இயற்கையோட சமச்சீர்நிலையும் கெடுதாம்...(அடப்போங்கப்பா...இதை எங்க ஊர் மேதா பட்கர் சொல்லியே எங்களுக்கு புரியலை... கிளம்பிட்டாங்க.. பேர் தெரியாத ஊர்ல இருந்து)

இன்னும் நிறைய சொல்றானுங்க... நமக்கெதுக்கு அதெல்லாம்... யாருய்யா அது? என்ன கூட்டம் அங்கே?... என்னது அரசியல் தலைவருக்கு.. பிறந்த நாளா?.. முக்கியமான விஷயமாச்சே?

இங்கே என்னய்யா கூட்டம்? அரசியல் தலைவர் வீட்டில ரெய்டா?..ரொம்ப முக்கியம்.. இருங்கய்யா நானும் வரேன்...

இதுல இருந்து நானே மாறுபடறேன்...இதையும் படிங்க

10 கருத்துகள்:

  1. நல்ல பதிவு! சுற்றுச் சூழல் குறித்து எந்த விழிப்புணர்வும் இன்றி இருக்கும் நம் மக்களுக்கு நினைவூட்டவேண்டிய செய்திகள்!

    பதிலளிநீக்கு
  2. //
    (அடப்போங்கப்பா...இதை எங்க ஊர் மேதா பட்கர் சொல்லியே எங்களுக்கு புரியலை... கிளம்பிட்டாங்க.. பேர் தெரியாத ஊர்ல இருந்து)
    //
    நம்ம ஊர்க்காரங்க சொல்லி நாம என்னைக்கு கேட்டு இருக்கோம்?

    பதிலளிநீக்கு
  3. PRINCENRSAMA,
    சிவபாலன்,
    skumar...

    மிருகமாய் திரிந்த மனிதனுக்கு உணவு, உறைவிடம் இதெல்லாம் சரியா அமைஞ்ச பின்னாடி தான்... பண்பாடு,நாகரீகம் எல்லாம் வளர்ந்து, கலை, அரசியல், மொழி எல்லாம் வந்துது... நாம அரசியல், மொழி, கலைன்னு பின்னாடி வந்த விஷயங்களை பிடிச்சிட்டு இயற்கைய மறந்துட்டோம்... அதான் சின்னதா ஒரு பதிவு... பின்னூட்டம் போட்டவங்க, போடாதவங்க எல்லாருக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு.

    பாராட்டுகிறேன்.

    உங்களுடைய பதிவை எங்கள் முத்தமிழ்மன்றத்தில் பதிய அனுமதி கேட்கிறேன்.

    அப்புறம் வாய்ப்பு கிடைத்தால் இந்த டாகுமெண்டரி படம் பாருங்க.

    http://en.wikipedia.org/wiki/An_Inconvenient_Truth

    சமீபத்தில் தான் பார்த்தேன். என் நண்பர்களையும் பார்க்க சொல்லி வருகிறேன்.

    நன்றி

    அன்புடன்
    பரஞ்சோதி
    paransothi@gmail.com
    www.muthamilmantram.com

    பதிலளிநீக்கு
  5. நல்ல விடயம் ஆனால் பால் ஊத்தீட்டாங்க போல தான் இருக்கு..

    பதிலளிநீக்கு
  6. மாயன்,
    வ.வா.ச'வின் முதாலாமாண்டு நிறைவுக்காக கொத்தனார் எழுதிய பதிவும்ம் ,.வ.வ.ச'வின் பதிவும். நல்லதை எத்தனை முறை வேணுமின்னாலும் சொல்லலாங்களே.

    http://wikipasanga.blogspot.com/2007/04/global-warming.html

    http://vavaasangam.blogspot.com/2007/04/1.html

    பதிலளிநீக்கு
  7. "இனி எல்லாம் பயமே" என சஞ்சய் அனுப்பினார்.

    //சைனாவில இருந்து ஒருத்தன் சொல்றான்... இப்படியே போனா இன்னும் 30 வருசத்துல உலக வரைபடத்துல இருந்து சென்னை, மும்பை, லண்டன், நியூயார்க் நகரம் எல்லாம் காணாம போய்டுமாம்….

    அமெரிக்கால இருந்து இன்னொருத்தன் சொல்றான் பனிமலை எல்லாம் உருகுதாம்... 2080-ல உலகத்தோட கடல் மட்டம் 23 அடி ஜாஸ்தி ஆயிடுமாம்... //

    எவ்ளோ பயம்னு காட்டிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  8. நான் சொல்வது எல்லாம் உண்மை... உண்மையன்றி வேறில்லை

    சஞ்சய்.. ராமலக்ஷ்மி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு