உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

திங்கள், ஜூன் 11, 2007

என்ன தான்யா வேணும் உங்களுக்கு?


ப்ராமினிஸம், திராவிடம்....

அவனும் அவங்க மேல திணிக்கப்பட்ட குலத்தொழிலை செஞ்சிட்டு இருக்கலை நீங்களும் உங்க மேல திணிக்கப்பட்ட குலத்தொழில செஞ்சிட்டு இருக்கலை... நாடு நல்லா முன்னேறி கம்ப்யூட்டர் உபயோகபடுத்தி வலைப்பதிவு போடற அளவுக்கு அறிவும், பணமும், வசதிகளும் நமக்கு கிடைச்சிருக்கு....

நானும் இதை பத்தி பேச கூடாதுன்னு தான் நினைச்சேன்.. ஆனா நடக்கிற சண்டைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட மோசமா பொயிட்டிருக்கு..

எனக்கு தெரிஞ்சு இந்த போராட்டங்களும், சண்டைகளும் நடக்க வேண்டிய இடம் இது இல்லை... எங்கே இன்னும் இந்த ஜாதி பிரச்சினைகள் இருக்கோ அங்கே தான் இந்த போராட்டங்கள் நடக்கனும்…

ஏன் அங்கே போராடறதுக்கு ஆள் இல்லையா? என்ன பண்ணிட்டு இருக்காங்க அங்க உள்ள அரசாங்கமும், சமூகவாதிகளும்?


சாவியை ஒரு இடத்தில இருட்டுல தொலைச்சிட்டு, இன்னொரு இடத்தில வெளிச்சத்துல தேடற மாதிரி இங்கே ஏன் தேவை இல்லாம சண்டை?...

பணம் வந்துட்டா ஜாதி மதம் எல்லாம் காணாம போயிடும்ங்கிறது நிதர்சனமான உண்மை.... இப்ப எல்லாம் 2 ஜாதி தான்... பணக்காரன் ஜாதி, ஏழை ஜாதி... அவ்வளவு தான்... வசதி வந்துட்டா ஏற்ற தாழ்வும் அதுக்கு ஏத்த மாதிரி மாறிக்குது....

பணக்காரார்களையும், தொழில் அதிபர்களையும், அரசியல்வாதிகளையும் என்ன ஜாதின்னு யாராவது கேக்கறாங்களா என்ன?

அரசியல்வாதிகள் அவங்க சொந்த லாபத்துகாக இதை பிரச்சினை ஆக்கறாங்க.. நாமும் என்ன ஏதுன்னு புரியாம அடிச்சிகறோம்...

கவனிக்க வேண்டிய பிரச்சினை நிறைய இருக்கு...

அவங்க பண்ணாலும் தப்பு தான் நாம பண்ணாலும் தப்பு தான்... ஆகவே சகோதரர்களே.. நோ சண்டை பிளீஸ்...

9 கருத்துகள்:

  1. //அவங்க பண்ணாலும் தப்பு தான் நாம பண்ணாலும் தப்பு தான்... ஆகவே சகோதரர்களே//

    சகோதரரே அவங்கன்னா யாரு?நாமன்னா யாரு?

    பதிலளிநீக்கு
  2. //சகோதரரே அவங்கன்னா யாரு?நாமன்னா யாரு? //

    அது உங்களை நீங்க என்னவா நினைச்சுட்டு படிக்கிறீங்களோ அதுக்கேத்த மாதிரி மாறும்...

    பதிலளிநீக்கு
  3. இந்த பதிவு பாப்பானுக்கும் சேர்த்துதானே?

    பதிலளிநீக்கு
  4. //இந்த பதிவு பாப்பானுக்கும் சேர்த்துதானே? //

    தேவை இல்லாத பிரிவினைவாதம் பேசும் அனைவருக்கும் தான்...

    பதிலளிநீக்கு
  5. 25 வருட ஆட்சியில் திராவிட ஆட்சியாளர்களால் சாதிக்க முடியாததை இங்கே சண்டை பிடித்து நம்மால் சாதித்து விட முடியும் என்றால் இந்த சண்டைகள் வரவேற்கபடட்டும்...

    பதிலளிநீக்கு
  6. ஏன் இந்த சாதி கொடுமைகளை பெரியார் வழி வந்த கட்சிகள் நடத்தும் ஆட்சிகளில் கூட முழுதாக ஒழிக்க முடியவில்லை?
    ஏனெனில் நாம் இதை சமூக பிரச்சினையாக பார்க்குமிடத்து அவர்கள்(அரசியல்வாதிகள்) இதை அரசியல் பிரச்சினையாக பார்க்கிறார்கள்... யார் அடிப்பட்டாலும் அவர்களுக்கு லாபம் தான்...

    பதிலளிநீக்கு
  7. மாயன் அவர்களே,

    நீங்கள் நல்லவரா கெட்டவரா? தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் விடாது கருப்பு... நியாயமான உங்கள் கோபங்களை நான் குறை கூற வரவில்லை... அடக்குமுறை எங்கே எந்த ரூபத்தில் இருந்தாலும் சாட வேண்டியது தான்... சாடும் முறைகளும்.. சாடுதல் அளிக்கும் பயன்களும் குறித்த தொலைநோக்கு வேண்டும் என்று மட்டுமே சொல்ல வருகிறேன்...

    தங்கள் வருகைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  9. Maayan, either you pull these commentators up, or you, please, come down to their/our level.
    Money alone cannot eradicate caste consciousness ... it is 'education + money + cultured mind' that would enhance society.
    So long as society supports 'do not learn Hindhi/Sinhala' the Tamil Society has no 'vimosanam' at all . . . for it signifies a 'closed mind'.

    பதிலளிநீக்கு