உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, ஜூன் 17, 2007

சே குவேரா - ஏகாதிபத்தியத்தின் எமன்


“கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)”

சே குவேராவை சுட்டுக் கொல்ல பணிக்கப்பட்டு இருந்த எதிரி வீரனின் கைகள் நடுங்கி கொண்டிருந்தன...

"ஏன்னை கொல்ல போவது நீ தான்.. கோழையே நடுங்காமல் சுடு.. நீ ஒருவனை கொல்ல போகிறாய் அவ்வளவு தான்..."

என்றாராம் மாவீரன் சே குவேரா.....

சே குவேரா - இந்த ஒற்றை வார்த்தை தான் எத்தனை தேசங்களின் தலையெழுத்தை திருப்பி போட்டு இருக்கிறது...

எத்தனை வர்க்கங்களின் போர்முறைகளை மாற்றி போட்டு இருக்கிறது....

யார் இந்த சே குவேரா என்று கெட்பவர்களுக்கு இந்த இரும்பு மனிதனை, வாழ்வு முழுமையையும் போரிலேயே தொலைத்து, உயிரையும் போரிலியே தொலைத்த தோழரை அறிமுகப் படுத்தும் படலமாக இருக்க போகிறது இந்த பதிவு.

சே குவேராவின் திறமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்...

சே ஒரு தலைசிறந்த சிந்தனையாளர், மார்க்சிய-லெனினிசவாதி...
தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்...
அரசியல்-தத்துவவாதி,
லத்தீன் மற்றும் உலகெங்கிலும் இருந்த கொரில்லா போராளிகளின் தலைவர்....
ஒரு செஸ் வீரர்,
சிறந்த புகைப்பட கலைஞர்,
கவிஞரும் கூட..

Ernesto Guevara de la Serna- இது தான் அவரது இயற்பெயர்... பெற்றோர் இட்ட பெயர்...

1928-ல் அர்ஜன்டைனாவில் 3 சகோததரர்களூம், 2 சகோதரிகளும் கொண்ட பெரிய குடும்பத்தில் மூத்தவராக பிறந்த குவேரா 3 வயது முதலே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்...

பிறவியிலேயே போராடும் குணம் கொண்ட சே குவேராவை ஆஸ்துமாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை... அது தன் கடமையை செய்ய சே எதுவுமே நடக்காதவர் போல் ஒரு சிறந்த தடகள வீரனாகவும், ரக்பி விளையாட்டு வீரனாகவும் உருவானார்.

19வது வயதில் பல்கலைகழகத்தில் மருத்துவ படிப்புகாக அடியெடுத்து வைத்த சே. 1951-ல் தன்னுடைய 22வது வயதில்... நண்பரான ஆல்பர்டோ என்பவரது யோசனையின் பேரில் ஒரு வருடம் படிப்பை கைவிட்டு தென் அமெரிக்கா முழுதும் சுற்றி திரிய முடிவு செய்தார்...

இருவரும் தங்கள் பயணதுக்கு தெரிவு செய்த வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள்... வல்லமை பொருந்தியவன் 2 என்று சேவால் பெயரிடப்பட்ட அந்த நார்டான் 500CC வாகனத்தில் எங்கே சென்றார் என்று நினைக்கிறீர்கள்?

தொழு நோயாளிகள் தங்க வைக்கப்படும் இல்லமான LEPER COLONIES எனப்படும் இடத்துக்கு சென்று சில மாதங்கள் தங்கியிருந்து அவர்களுக்கு சேவை புரிய...

சேவை செய்வதற்காக மோட்டார் சைக்கிளிலேயே பல நூறு மைல்கள் தூரம் நாடு விட்டு நாடு கிளம்பிய சே குவேராவின் கண்களில் பட்ட காட்சிகள்...

வறுமை, வறுமை, அடக்குமுறை, பசி, பஞ்சம்.... இவை தாம்

கிட்டத்தட்ட அவர் பயணம் செய்த அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளுமே இதே நிலைமையில் தான் இருந்தன...

பெரிய சிந்தனையாளரும், இலக்கியவாதியும், மார்க்சிசிய தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவருமான சே இந்த சமூக ஏற்ற தாழ்வுகளுக்கும், வறுமைக்கும் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் தான் தீர்வு காண முடியும் என்று நம்பினார்....

அவர் இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லவற்றுக்குமான ஒரே தீர்வாக இந்த போராட்டத்தை உருவகம் செய்து கொண்டார்.

-தொடரும்

2 கருத்துகள்:

  1. மாயன்,

    சில வருடங்களுக்கு முன் குமுதம் தீராநதியில்(அல்லது உயிர்மையா) வந்த சேகுவேரா கட்டுரைத்தானே இது!

    எப்படி இருப்பினும் நல்லப்பதிவு! சே வின் வண்ணப்படம் இருந்தால் போடவும்.

    பதிலளிநீக்கு
  2. இல்லை.. விக்கிபீடியா மற்றும் வலைத்தளங்களின் உதவியோடு நானே உருவாக்கும் கட்டுரை இது...

    கருப்பு வெள்ளையோ... கலரோ ... என்ன கம்பீரம் பாருங்க... இதை பார்த்தப்புறம் நம்ம சினிமா ஹீரோங்க படத்துல கையை உயர்த்தி கம்யூனிசம் பேசும் போது பத்திக்கிட்டு வருது...

    அவர் வரலாற்றை முழுவதுமா சொல்ல முடியும்னு தோணலை.. முக்கியமானதை மட்டும் சொல்லலாம்னு ஒரு ஆசை..பதிவர்கள் எதை எதை பற்றியோ படிகிறாங்க.. தெரிஞ்சிக்கறாங்க.. சே-வை பற்றியும் தெரிஞ்சக்கட்டுமேன்னு பதிவு பண்றேன்...தாய்மொழில படிச்சாலே ஒரு கிக் தானே...

    பாராட்டுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு