உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, ஜூன் 23, 2007

எட்டு போட இது ஆர்.டி.ஓ ஆஃபீஸாயா?

சதுர்வேதி அய்யா தெரியாம என்னை எட்டு போட கூப்பிட்டுட்டார்...
அவருக்கு நன்றி.

வாழ்க்கை பாதையில நாம எல்லோரும் எதையோ நோக்கி எட்டு போட்டுகிட்டு தான் இருக்கோம். ஆனா அது என்னன்னு தான் தெரியலை.. எதுவா வேணா இருக்கட்டும்.. இருக்கிற வரை யாருக்கும் தொந்திரவு கொடுக்காம நம்ம வேலையை பாத்துக்கிட்டு இருந்தாலே அதுவே பெரிய சாதனை.

எனக்கு எதுவுமே முழுசா தெரியாதுங்க... எதையுமே அதோட ஆழம் வரை போய் கத்துக்கிற போறுமை எனக்கு இருந்ததில்லை.. ஆனா அரைகுறையா நான் கத்துக்கிட்ட, கத்துக்கிட்டு வர விஷயங்கள் நிறைய...

இப்ப, நான் மறக்க முடியாத சில விஷயங்கள்...

1) பள்ளி படிக்கிற காலத்தில எல்லா பசங்களும் கிரிக்கெட் ஆடிட்டிருக்கிற நாட்கள்ல நான் நூலகமே கதியா கிடப்பேன். இன்னைக்கு அதோட பயன்களை உணர்றேன்..

2) அந்த பக்கம் வேலை இருக்கோ இல்லையோ மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகள்ல எல்லார் முகத்துலேயும் எதையோ தெடிக்கிட்டு நடக்கறது எனக்கு இன்னைக்கும் பிடிக்கும்.

3) கடற்கரையில கடல் அலையில கால் நனைச்சுட்டே நடந்த கல்லூரி நாட்களை மறக்கவே முடியாது.

4) ஒரு காலத்துல எல்லா கவுன்சலேட்களும் போய் ஓசி இனிவிடேஷன் வாங்கி வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள், சினிமாக்கள், பல்சுவை நிகழ்ச்சிகள் என மியுசியம் தியேட்டர், மியுசிக் அகாடமி, பிலிம் சேம்பர் என சைக்கிளிலேயே சுற்றி திரிந்தேன்... மறக்க முடியாத அனுபவங்கள்..

5) பொன்னியின் செல்வன்... தூங்காமல் கண்முழிச்சி இந்த காவியத்தை படிச்ச அனுபவம்... சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு...யவன ராணி- எல்லாம் அப்படி தான்... ஒரு மேனியா மாதிரியே ஆயிடுச்சு... வாழ்க்கையில நாம நமக்காக சில கணங்கள் வாழ்ந்திருப்போம்ல... அதுல இதுவும் ஒண்ணு...

6) எந்த பொருளுமே முதல் முதல்ல நமக்கு கிடைக்கும் போது. ஒரு விதமான பரவசநிலையில கொஞ்ச நாள் இருப்போம்... பைக், கம்ப்யூட்டர், கார், செல்போன்... எதுவா வேணா இருக்கட்டும்... அந்த முதல் சில நாள் சந்தோஷம் இருக்கே... அடாடடா.. அதுக்கு ஈடு இணையே கிடையாது போங்க...:-)


7) என் சித்தப்பா... என்னை ஊக்கப்படுத்திட்டே இருப்பார். நான் எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்னு கண்ணை மூடிட்டு நம்புவார்... வாதாடுவார்... அவருக்காகவே நான் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வேன்... அவரோட திடீர் மறைவு என்னை பாதிச்சுடும்னு தான் நினைச்சேன்..

ஆனா பாதிக்கலை...

அவர் மறைந்து போனதாக என் மனம் இன்னைக்கும் நம்பலை...


8) என் காதலி கிட்ட என் காதலை தைரியமா வெளிப்படுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டது... (காதலை சொன்னவங்களை கேட்டு பாருங்க... அதுக்கு நிறைய தில் வேணும்ங்க)

கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேன்னு நினைக்கிறேன்...

சரி நாம ஒரு எட்டு பேரை அழைப்போம்..

1. தீபா
2. யோகன் பாரிஸ்
3. மாயூரேசன்
4. செந்தழல் ரவி
5. தமிழ் சசி
6. நந்தா
7. வவ்வால்
8. நளாயினி

வாங்க வந்து கலந்துக்குங்க...

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர் (கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

8 கருத்துகள்:

  1. மாயன் மிகை இல்லாத ஒரு எட்டு போட்டு இருக்கிங்க ..,. ஆன என்னை ஆட்டத்துகு கூப்பிடு கலாய்ச்சிடிங்களே! இப்படிலாம் அழைப்பு வந்தால் நாலு கால் பாய்ச்சலில் பின்னம் கால் பிடறியில் பட ஒட்டுவது எனது பழக்கம்!

    //என் காதலி கிட்ட என் காதலை தைரியமா வெளிப்படுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டது... (காதலை சொன்னவங்களை கேட்டு பாருங்க... அதுக்கு நிறைய தில் வேணும்ங்க)//

    தில்லாக் கேட்டிங்க சரி அந்தபுரத்திலிருந்து என்ன பதில் வந்தது சாமி அதை சொல்ல வேணாமா? சுபம் போட்டிங்களா?

    இல்லை எனக்கொரு காதலி இருக்கின்றால் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்னு நினைவில் தாலாட்டு மட்டும் தான் பாடுறிங்களா?

    பதிலளிநீக்கு
  2. வவ்வாலாரே,

    //இப்படிலாம் அழைப்பு வந்தால் நாலு கால் பாய்ச்சலில் பின்னம் கால் பிடறியில் பட ஒட்டுவது எனது பழக்கம்//

    தலைக்கீழா உலகத்தை பார்க்கிற உங்க அனுபவம் சுவாரசியமா இருக்குமே... அதான்...

    //அந்தபுரத்திலிருந்து என்ன பதில் வந்தது //

    சுபம் போட்டு சுபயோக சுபதினத்துக்காக வெயிட்டிங்...

    பதிலளிநீக்கு
  3. சேவியரும் சுயதம்பட்டத்தக்கு அழைத்திருக்கிறார். இதுகும் அது தானே. அல்லது வேறைமாதிரியானதா. பிளீஸ் சொல்லுங்கள். அடடா உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஓ.. மறக;க முடியாத அனுபவமா. புரிகிறது புரிகிறது. அது வேறை இது வேறை ஓகே. ஐமாச்சிடலாம்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க மேடம்.. ஜமாய்ங்க... கவிதாயினிக்கு எட்டெல்லாம் பத்தாது தான்... என்ன செய்ய விளையாட்டு விதிகள் அப்படி

    பதிலளிநீக்கு
  6. அழைப்பை ஏற்றதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  7. முதலில் அழைத்ததற்கு நன்றி.

    //வாழ்க்கையில நாம நமக்காக சில கணங்கள் வாழ்ந்திருப்போம்ல... அதுல இதுவும் ஒண்ணு...//

    வாவ்வ்வ்வ்வ். சூப்பர்.

    //என் காதலி கிட்ட என் காதலை தைரியமா வெளிப்படுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டது... (காதலை சொன்னவங்களை கேட்டு பாருங்க... அதுக்கு நிறைய தில் வேணும்ங்க)//

    உண்மைதான். இதுக்கு ரொம்பவே தில் வேணும்.

    சரி இப்போ நான் 8 போடணும். கூடிய சீக்கிரம் போட்டுடறேன்.

    பதிலளிநீக்கு
  8. என்னாலான 8ஐ நானும் போட்டிருக்கேன்

    பதிலளிநீக்கு